திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அரசு துணை சுகாதார நிலையம்!

83பார்த்தது
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அரசு துணை சுகாதார நிலையம்!
திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சியில் 1982ம் ஆண்டு அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் அத்தியாவசிய முதுலுதவி உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக துணை சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் 2015 முதல் முற்றிலும் சேதமடைந்ததால் பணியாற்ற செவிலியர்களும், சிகிச்சைக்கு வர நோயாளிகள் அச்சப்பட்டனர். துணை சுகாதார நிலையத்தின் நிலை குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக 2022ல் ஆபத்தான துணை சுகாதார நிலையம் அகற்றப்பட்டது.

அதே இடத்தில் 15-வது நிதிக் குழு மானியம் 2021 -2022 திட்டத்தில், ரூ. 30 லட்சத்தில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. ஆனால் இன்று வரை திறக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வருகிறோம் என வருத்தமாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி