சாயல்குடி பேரூராட்சியில் கால்நடைகளால் தொல்லை.!

69பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நகர் பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொது மக்களுக்கு தொல்லையாகவும் கால்நடைகள் உலா வருகின்றன.

இரவு நேரங்களில் ரோட்டில் பெரும்பாலான பகுதிகளில் ஓய்வெடுக்கும் கால்நடைகளை விரட்டுவோரை அவை முட்டுகின்றன. சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை, அருப்புக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டில் அவிழ்த்து விடப்படும் கால்நடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர், போலீசார் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி