அழுகிய அன்னாசி பழங்களை சாலையில் கொட்டும் வியாபாரிகள்.!

79பார்த்தது
அழுகிய அன்னாசி பழங்களை சாலையில் கொட்டும் வியாபாரிகள்.!
சாயல்குடியில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. சந்தைக்கு வரும் பழ வியாபாரிகளில் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழுகிய மாம்பழங்களை ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு கொட்டியதால் பன்றிகள் மற்றும் கால்நடைகள் தின்று பரப்பி சுகாதாரக்கேடாக இருந்தது.

இந்நிலையில், இன்று (8. 06. 2024) ராமநாதபுரம் சாலையில் உள்ள வீர பெருமாள் கோவில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு இடையில் கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக அழுகிய அன்னாசி பழங்களைகொட்டி வைத்துள்ளனர்.

ஏற்கனவே உரிமையாளர்கள் பராமரிப்பு இல்லாமல் விடப்படும் ஆடு மாடுகளால் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மேற்கண்டவாறு கொட்டப்பட்டுள்ள அழுகிய அன்னாசி பழங்களை தின்பதற்காக வரும் ஆடு மாடுகளால் வாகனங்களில் செல்வோருக்கு அதிக அளவில் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே, மேற்கண்டவாறு சாலையோரம் கொட்டப்பட்டுள்ள அழுகிய அண்ணாச்சி பழங்களை உடனடியாக அகற்றுவதோடு வருங்காலங்களில் இது போன்று சுகாதாரத் தேடாக பொதுவெளியில் அழுகிய பழங்களை கொட்டாதவாறு பேரூராட்சி நிர்வாகம் சுகாதாரத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி