மாடுகள் பூட்டிய தேரில் சுவாமிகள் நகர்வலம்.!

76பார்த்தது
கமுதி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி விநாயகர், முருகன், முத்துமாரியம்மன் ஆகிய சுவாமிகள் மாடுகள் பூட்டிய தேரில் நகர்வலம் வந்தன. இதனை தெருவெங்கிலும் இரு குலங்களில் கூடி நின்ற பக்தர்களும் பொதுமககளும் வணங்கி சுவாமி தரிசனம் பெற்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று இரவு மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் முருகன், வெள்ளி குதிரை வாகனத்தில் முத்துமாரியம்மன் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட தேரில் 3 ஜோடி மாடுகள் பூட்டி கேரள செண்டை மேளம், கேரள நடன கலைஞர்களுடன், மேளதாளங்களுடன் கமுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நகர்வலம் வந்து கோவிலை அடைந்தனர். இந்தத் தேர் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி