கோயில் ஊருணியில் கழிவுநீர் கலப்பு.!

82பார்த்தது
கோயில் ஊருணியில் கழிவுநீர் கலப்பு.!
சிக்கல் அய்யன் கோயில் ஊருணி செல்லும் வரத்து கால்வாயில் கழிவுநீர் செல்வதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சிக்கல் அய்யன் கோயில் ஊருணி 2. 5 ஏக்கரில் அமைந்துள்ளது. முன்பு குடிநீர் ஊருணியாக இருந்தது காலப்போக்கில் கழிவுகள் கலந்ததால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

அய்யன் கோயில் ஊருணியில் சுற்று பகுதியைச் சேர்ந்தவர்கள் குளிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர். சிக்கல் நகரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக கோயில் ஊருணி வரத்து கால் மூலமாக நேரடியாக விடப்படுவதால் இதனால் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

சிக்கலைச் சேர்ந்த விவசாயி போஸ் கூறியதாவது: அய்யன் கோயில் ஊருணியில் பொதுமக்கள் குளிக்க முடியாத அளவிற்கு கழிவுநீர் கலக்கிறது. 12 அடி அகலம் உள்ள ஓடையின் வரத்துக்கு கால்வாய் பகுதி தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஓடையின் நீர்வரத்து பகுதியில் கழிவுநீர் செல்வதால் ஊருணியில் குளிப்பவர்களுக்கு தோல் நோய் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகிறது எனவே சிக்கல் ஊராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்திடவும் மழை காலத்திற்கு முன்பாக முறையாக துார்வாரிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி