சாயல்குடியில் அதிவேக பைக்கால் மக்கள் அச்சம்.!

82பார்த்தது
சாயல்குடி நகர் பகுதிகளில் அதிவேக ரேஸ் டூவீலர்களில் சுற்றும் இளைஞர்களால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அருப்புக்கோட்டை சாலை, ராமநாதபுரம் சாலை, தூத்துக்குடி செல்லும் சாலையில் 90 கி. மீ. , வேகத்தில் மக்கள் நடமாடும் பகுதியில் உலா வரும் இளைஞர்களால் பொதுமக்கள், முதியவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

பெரும்பாலும் காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் இது போன்ற ரேஸ் பைக்குகள் அதிகளவு உலா வருகின்றன. இதில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அப்பாவி பொதுமக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.

இதே போன்று பள்ளி நேரம் முடிந்தவுடன் சாலையின் வழியாக வீடுகளுக்கு செல்லும் மாணவவிகளை கவர்ந்திட சாகசங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து சாயல்குடி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி