கமுதி அருகே பேரையூரில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் 25-வது கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. தலைவர் அகமது யாசின் தலைமை வகித்தார். முதல்வர் திருவேணி முன்னிலை வகித்தார்.
விழாவில் கார்கில் போரில் பங்கு கொண்ட முன்னாள் ராணுவ வீரர்கள் சுபேதார் கோவிந்தராஜ், ஹவில்தார் நாகராஜ் கலந்து கொண்டனர். ராணுவ வீரர்களுக்கு கல்லுாரி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தேசப்பற்று மற்றும் கார்கில் போர் பற்றிய அனுபவங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி பேசினர்.
கல்லுாரியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் பரிசு, சான்றிதழ் வழங்கினர். பின்பு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் நவீன் நன்றி கூறினார்.