கமுதி-சென்னை தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூல் என புகார்!

69பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வந்த அரசு விரைவு பேருந்து அதிகாரிகளின் அலட்சியத்தாலும், தனியார் பேருந்துகளுக்கு வழிவிடும் வகையில் கடந்த ஒரு வருட காலமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள், பயணிகள புகார் தெரிவிக்கின்றனர். இதனால் கமுதி, சாயல்குடி, அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னையில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் கமுதியிலிரந்து சென்னைக்கு செல்லும் தனியார் சொகுசு பேருந்துகளில் சாதாரண நாட்களில் 900 முதல் 1200 வரையும், விஷேச நாட்களில் 1800 முதல் 2ஆயிரம் வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், கமுதியிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டுவந்த அரசு விரைவு பேருந்து நிறுத்தப்பட்டதால், கமுதியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரமக்குடி மற்றும் மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு பேருந்து மூலம் சென்று அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு பயணிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கமுதியிலிருந்து சென்னைக்கு செல்லும் 6 க்கும் மேற்பட்ட தனியார் சொகுசு பேருந்துகள் பொது மக்களிடம் 1800 முதல் 2000 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டு கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி