மொகரம் பண்டிகை கொண்டாடிய இந்துக்கள்.!

84பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தில் தர்கா மாமுனாட்சி அம்மனுக்கு பண்டைய கால முகலாயர் ஆட்சி, பாண்டியர் மன்னர் ஆட்சி காலத்திலிருந்து கடந்த 400 ஆண்டு காலத்திற்கு மேலாக இந்துக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து இந்து கலாச்சார முறைப்படி இஸ்லாமிய மத கொடியை கையில் ஏந்தியவாறு தீ மிதித்து குண்டம் இறங்கி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

முன்னதாகவும், நிறைவாகவும் இந்துக்கள் கலாச்சார முறைப்படி காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் வானவேடிக்கை இசை வாத்தியங்களுடன் சந்த குட சப்பரத்தை ஊர்வலமாக தர்காவிற்குள்கொண்டு சென்று வழிபாடு செய்தனர்.

இதில், சாயல்குடி, கடலாடி சுற்று பகுதியை சேர்ந்த இந்துக்கள் இஸ்லாமிர்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி