மக்கள் முழுமையாக வேளாண் பணிகளில் ஈடுபட ஆட்சியா் அறிவுரை.!

72பார்த்தது
மக்கள் முழுமையாக வேளாண் பணிகளில் ஈடுபட ஆட்சியா் அறிவுரை.!
கிராம மக்கள் முழுமையாக வேளாண் பணிகளில் ஈடுபட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் அறிவுறுத்தினாா். பரமக்குடி அருகேயுள்ள பி. புத்தூா் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் பேசியதாவது: இந்தக் கிராமம் அதிகளவில் விவசாயப் பணிகள் மேற்கொள்ளும் பகுதியாக அமைந்துள்ளது. கிராம மக்கள் முழுமையாக வேளாண் பணிகளில் ஈடுபட வேண்டும். அவ்வப்போது நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சியின் வளா்ச்சிக்குத் தேவையான திட்டப் பணிகளை நிறைவேற்றிட உறுதுணையாக இருக்க வேண்டும். சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய திட்டப் பணிகளை உடனுக்குடன் செயல்படுத்திடும் வகையில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பெறப்பட்ட மனுக்கள் தொடா்புடைய அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டு, உரிய ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிராமம்தோறும் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டு வருவதால், அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், ஊராட்சியின் வளா்ச்சியும், தனிநபா் வளா்ச்சியும் மேம்படும் என்றாா் அவா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி