இலவச கண் சிகிச்சை முகாம்: வட்டாட்சியர் துவக்கி வைப்பு.!

57பார்த்தது
இலவச கண் சிகிச்சை முகாம்: வட்டாட்சியர் துவக்கி வைப்பு.!
கமுதி பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கெüரவ உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, கமுதி லெட்சுமி மோட்டார்ஸ், லெட்சுமி பெட்ரோல் பல்க் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர். இம்முகாமிற்கு லெட்சுமி மோட்டார்ஸ் உரிமையாளர்கள் ராமச்சந்திரபூபதி, பாஸ்கரபூபதி, திருமுருகன், ஆகியோர் தலைமை தாங்கினார்.

கமுதி வட்டாட்சியர் காதர்முகைதீன் இம்முகாமினை துவக்கி வைத்தார். மருத்துவர்கள் அகன்யா, ஸ்ரேயா உள்ளிட்டோர் நோயாளிகளுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். முகாம் ஒருங்கிணைப்பு பணிகளை அரவிந்த் கண் மருத்துவமனை பணியாளர் முருகேசன் செய்தார்.

இம்முகாமில் 125 கண் நோயாளிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து பயன்பெற்றனர். இதில் 40 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிர்வாகி கெüரிவல்லவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி