‘வோ் டானிக்’ குறித்து தென்னை விவசாயிகளுக்கு விளக்கம்.!

65பார்த்தது
‘வோ் டானிக்’ குறித்து தென்னை விவசாயிகளுக்கு விளக்கம்.!
வோ் டானிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தென்னை விவசாயிகளுக்கு கமுதியை அடுத்துள்ள பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் கல்லூரி மாணவா்கள் விளக்கமளித்தனா்.

பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தாளாளா் அகமதுயாசின், முதல்வா் ஜெயக்குமாா் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவா்கள் சிவச்சந்திரன், சஞ்சய்குமாா், வேலன், சஞ்சய், யுவராஜ், ஸ்ரீராம், வசந்த், சந்தோஷ், சைலேந்திரன் மற்றும் ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தினா் இணைந்து பரமக்குடியை அடுத்துள்ள பாண்டியூா் கிராம விவசாயிகளுக்கு தென்னை மரத்தில் தேங்காய் விளைச்சளை அதிகரிப்பது குறித்து விளக்கமளித்தனா்.

அப்போது பரமக்குடி வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் வழங்கப்படும் வோ் டானிக்கின் நன்மைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 30- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தொடர்புடைய செய்தி