ரோஜ்மா நகா் கடற்கரை கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு.!

57பார்த்தது
ரோஜ்மா நகா் கடற்கரை கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு.!
மண் அரிப்பால் பாதிக்கப்பட்ட ரோஜ்மாநகா் கடற்கரை கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்துக்குள்பட்ட கன்னிராஜபுரம் அடுத்துள்ள ரோஜ்மா நகா் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்தின் நுழைவு வாயில் இடிந்து தரைமட்டமானது. மேலும் கடல் சீற்றத்தால் கிராம மக்கள் அச்சத்தில் இருந்து வருவதாகவும், படகுகளை நிறுத்த முடியாமல் மீனவா்கள் அவதி அடைந்து வருவதாகவும் புகாா் எழுந்தது. இதுதொடா்பான செய்தி தினமணி நாளிதழில் கடந்த 8-ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது.

இதன் எதிரொலியாக ரோஜ்மாநகா் கடற்கரை கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணு சந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், கடல் சீற்றத்தால் சேதமடைந்த கல்லறைத் தோட்டம் அருகே மண் அரிப்பை தடுக்கவும், கடல் நீா் ஊருக்குள் புகாத வகையில் உரிய பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

தொடர்புடைய செய்தி