செல்லியம்மன் கோவிலில் பக்தர்கள் அக்கினிச்சட்டி ஊர்வலம்.!

59பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் 48 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கடந்த 12-ஆம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

இதில் 8-வது நாள் திருவிழாவான இன்று 2000த்துக்கு மேற்பட்ட பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்து முதுகுளத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து காந்தி சிலை பேருந்து நிலையம் அரசு மருத்துவமனை விடு முருகன் கோவில் வழியாக ஶ்ரீ வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் வந்து அடைந்தனர்.

இந்த ஊர்வலத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய நிகழ்ச்சியாக நாளை மற்றும்
20 ஆம் தேதி 10, 000க்கு மேற்பட்ட மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து 21ஆம் தேதி பால்குடம் மற்றும் அழகுவேல் குத்தியும் பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பல்வேறு அமைப்புகளில் இருந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி