சாயல்குடி அருகே மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் பலியானார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி ஆனந்த நகரை சேர்ந்தவர் வீரவேல் மகன் பவுல்ராஜ்(35). இவர் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது உறைக்கிணறு அருகே நிலைதடுமாறி சாலையோரம் இருந்த வேப்ப மரத்தில் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பவுல்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து பவுல்ராஜ் மனைவி கன்னிசெல்வி அளித்த புகாரின் பேரில் சாயல்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.