உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோவில் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு புதின் இதனை ஏற்றுள்ளார். மேலும், ரஷ்யா நீண்டகால அமைதியை விரும்புகிறது, தற்காலிகமாக அல்ல என்று புதின் தெரிவித்துள்ளார். அதே போல், 30 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் செய்வதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.