தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டமன்றத்தில் நிகழும் தமிழக பட்ஜெட் நிகழ்வை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று தாக்கலாகும் பொது பட்ஜெட், நாளை (மார்ச் 15) தாக்கலாகும் வேளாண் பட்ஜெட் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தல் வரும் நிலையில் இன்றைய பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.