சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை (அக் 16) கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இரண்டு தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழையும், சில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து காற்றழுத்து தாழ்வு மண்டலமாக மாறுவதர்கான வாய்ப்புகள் உள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.