தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

37539பார்த்தது
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக வெப்பநிலை வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று திடீரென்று தமிழகத்தின் ஒரு சில கடலோர மாவட்டங்களில் மழை பொழிந்துள்ளது. இதனால் தமிழகத்தின் வெப்பநிலையானது சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று(மார்ச்22)மற்றும் நாளை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி