வெயிட்டிங் லிஸ்ட் மூலம் வெயிட்டாக காசு பார்த்த ரயில்வே

85பார்த்தது
வெயிட்டிங் லிஸ்ட் மூலம் வெயிட்டாக காசு பார்த்த ரயில்வே
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ரயில்வே பற்றிய அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி 2021ஆம் ஆண்டு காத்திருப்பு பட்டியலில் இருந்து 2கோடியே 53லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில் இருந்து இந்திய ரயில்வேக்கு ரூ.242கோடியே 68லட்சம் கிடைத்துள்ளது. 2022ஆம் ஆண்டில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 4கோடியே 60லட்சம் டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டதில் ரூ.439.16 கோடி கிடைத்துள்ளது. 2023ஆம் ஆண்டில் ரூ.505 கோடி கிடைத்துள்ளது. தேவைக்கு ஏற்ப போதிய சேவை இல்லாததையே இது காட்டுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி