திருமங்கலம் டோல்கேட் - உள்ளூர் மக்களுக்கு தற்காலிக விலக்கு!

83பார்த்தது
திருமங்கலம் டோல்கேட் - உள்ளூர் மக்களுக்கு தற்காலிக விலக்கு!
மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சுங்கச் சாவடியில், உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று, அமைச்சர் மூர்த்தி தலைமையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மக்கள் தரப்பினருடன் நடந்த பேச்சுவார்த்தையில், தற்காலிகமாக உள்ளூர் வாகனங்களுக்கு முழு விலக்களிக்கும் நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்தி