மத்திய பிரதேசம் மாநிலத்தில் ரயிலுக்கு முன்னால் நடந்து சென்று தண்டவாளங்கள் இருப்பதை ரயில்வே ஊழியர்கள் உறுதி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், ரயிலை இயக்க ஓட்டுநர் சிரமப்படவே ரயிலை வழிநடத்தும் வகையில் ரயில்வே ஊழியர்கள் முன்னால் நடந்து சென்று சோதனை செய்துள்ளனர்.