ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றுள்ளது பெருமையாக உள்ளது. வெண்கல பதக்கத்தை கைப்பற்றி, ஒலிம்பிக் வரலாற்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்று அசத்திய முதல் இந்தியரான மனு பாக்கருக்கு எனது வாழ்த்துக்கள். நமது மகள் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.