விஜய் பற்றிய கேள்வி - ஜெயம்ரவி ரியாக்சன்

76பார்த்தது
விஜய் பற்றிய கேள்வி -  ஜெயம்ரவி ரியாக்சன்
ஜெயம் ரவி நடிப்பில் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ‘சைரன்’. இந்தப்படம் வெற்றியடைய வேண்டும் என்று சாமி தரிசனம் செய்ய ஜெயம்ரவி திருப்பதி சென்றுள்ளார். தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு, ஜெயம் ரவி, “ கோயிலில் இருக்கிறேன். இது போன்ற கேள்விகளை கோயிலில் வைத்து கேட்கலாமா?
என் படத்தை பற்றி கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன்' என்றார். ஆனாலும் அந்த செய்தியாளர் மறுபடியும் அதே கேள்வியை கேட்க அதற்கு கடைசி வரை பதில் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பபினார்.

தொடர்புடைய செய்தி