மலையாள படத்தில் அறிமுகமாகும் இயக்குனர் சேரன்

73பார்த்தது
மலையாள படத்தில் அறிமுகமாகும் இயக்குனர் சேரன்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் அவர் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நண்பர்களே! முதன்முதலாக நீண்டநாள் ஆசையாக இருந்த ஒன்று நிறைவேறி இருக்கிறது. மலையாள திரைப்படம் ஒன்றில் ஆகச்சிறந்த நடிகரான டொவினோதாமஸ் உடன் இணைந்து 'இஸ்க்' படத்தின் இயக்குனரான அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிக்கிறேன். என்றும்போல உங்கள் ஆதரவும் அன்பும் தேவை என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி