செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வாழ்வாதாரத்திற்காக உதவி கோரி தவெக நிர்வாகிகளை நாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து, தவெக தொண்டர்கள் அந்த பெண்ணிற்கு, தேநீர் கடை வைத்துக் கொடுத்தனர். இந்த நிலையில், இன்று (டிச.11) புதிதாக தொடங்கப்பட்ட “தளபதி தேநீர் விடுதி”-யை அக்கட்சியின் பொதுச்செயலாளர் திறந்து வைத்தார். தொடர்ந்து, கடைக்குள் சென்று தனது கைகளால் தொண்டர்களுக்கு டீ போட்டு கொடுத்தார்.