மெய் கண்ணுடையாள் கோயிலில் திருவிளக்கு பூஜை!

71பார்த்தது
விராலிமலை மெய் கண்ணுடையாள் கோயிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. விராலிமலை அம்மன் கோயிலில் 34 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழாண்டின் முதல் குத்துவிளக்கு பூஜை என்பதால் பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். முன்னதாக அம்மனுக்கு பால், பழம் சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள இசை இசைக்கப்பட்டு பக்தி பாடல்கள் பாடி ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் சுமந்து வந்த குத்து விளக்கை ஏற்றி வைத்து அம்மன் பாடல்கள் பாடி விளக்கு பூஜை நடத்தி வழிபட்டனர். ஆறாவது விளக்கு பூஜை ஜனவரி 5 நடைபெறுகிறது. விழா நாட்களில் அம்மன் வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். ஏற்பாடுகளை சுந்தர சுவாமிகள் தலைமையில் ஐயப்பன் சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி