காவிரி குடிநீர் குழாய் சீரமைப்பு!

69பார்த்தது
காவிரி குடிநீர் குழாய் சீரமைப்பு!
விராலிமலையில்
இருந்து இனாம்குளத்துார் செல்லும் சாலையில் கல்லறைதோட்டம் எதிரிலும், பெருவாய் பகுதியிலும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் சாலையில் வெளியேறி வீணாகியது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாயினர். இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இளநிலை பொறியாளர் சண்முகம் தலைமையிலான அலுவலர்கள் நேற்று காலை சம்பவ இடத்துக்கு வந்து குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர்.

தொடர்புடைய செய்தி