தாமரை மலர்ந்தால் தங்கம் விலை குறையும்!

71பார்த்தது
தாமரை மலர்ந்தால் தங்கம் விலை குறையும்!
கரூர் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து கரூர் வேலுசாமிபுரத்தில் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேசியது கரூரில் இருந்தவர் இப்போது எங்கு இருக்கிறார் சிறையில் இருக்கிறார் ஏன் சிறையில் இருக்கிறார் என்ன செய்தார் உங்களுக்கு கொலுசு, ஹாட் பாக்ஸ் தந்தவர் இன்று கம்பி எண்ணுகிறார். கரூரைச் சேர்ந்த பெரிய தம்பி அண்ணாமலை கோவையில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவரை நாங்கள் வெற்றி பெற வைத்து விடுவோம். கரூரைச் சேர்ந்த சின்னத்தம்பி செந்தில்நாதனை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். அப்போது தாமரை வெற்றி பெற்றால் தங்கம் விலை குறையுமா என்று ஒரு பெண் கேள்வி கேட்க உடனே வானதி சீனிவாசன் தாமரையை வெற்றி பெறச் செய்தால் தங்கம் விலை கண்டிப்பாக குறையும் கம்மல் மட்டும் இல்லை ஒட்டியானமே செய்து போடுவோம் என்றார். மகளிர் அணி மாநில துணைத்தலைவர் மீனா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதே போல் பாஜக வேட்பாளர் செந்தில் நாதனே ஆதரித்து கிருஷ்ண ராயபுரத்திலும் வானதி சீனிவாசன் பிரச்சாரம் செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி