புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு கேக் வெட்டிய முன்னாள் அமைச்சர்

2577பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு கேக் வெட்டி தொண்டர்களுடன் கொண்டாடினார்.
அண்மையில் சென்னை மற்றும் தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பொதுமக்களுக்கு பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கினார். இதனால் புதுக்கோட்டையில் தொண்டர்களுடன் அவரால் புத்தாண்டு கொண்டாட முடியவில்லை இந்நிலையில் பணிகளை முடித்துக் கொண்டு நேற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.

இந்நிலையில் இன்று காலை தனது சொந்த ஊரான இலுப்பூரில் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். அப்பொழுது நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க 2024 ஆம் ஆண்டு என்று பொறிக்கப்பட்ட கேக்கினை வெட்டினார். பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40க்கும் 40 இடங்களில் வெற்றி பெற்று கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் வெற்றிக் கனியை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு தொண்டர்களும் நாங்கள் முழுமையாக இரவு, பகல் பார்க்காமல் உழைத்து வெற்றிக்கனியை கழகப் பொதுச் செயலாளருக்கு அளிப்போம் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி