அங்கன்வாடி மையம் மேற்கூரை இடிந்து விழுந்தது!

69பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மலைக்குடிபட்டி லெட்சுமிபுரம் பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி கட்டிடத்தில் சுமார் 30 குழந்தைகளுக்கு மேல் படித்து வருகின்றனர் இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து நிலையில் இருப்பதாக அதிகாரிகளுக்கு பலமுறை அந்த பகுதி மக்களும் அலுவலர்களும் மனு அளித்தும் அதை சீரமைப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது இந்த நிலையில் இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் அங்கன்வாடி கட்டிடத்தில் மேல் கூரை திடீரென்று இடிந்து பெயர்ந்து விழுந்தது வழக்கமாக அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் ஒன்பதரை மணிக்கு தான் வருவார்கள் என்பதால் அதிர்ஷ்டவசமாக எந்த விதமான விபத்தும் ஏற்படவில்லை ஒன்பதரை மணிக்கு மேல் மேற்கூரை பெயர்ந்து விழுந்திருந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அங்கன்வாடி மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது இதனை புதுப்பித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தான் மாவட்ட ஆட்சியர் அருணா உங்களை தேடி உங்கள் ஊரில் சென்ற முதலமைச்சர் திட்டத்திற்கு அந்த அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி