குறுக்கே பாய்ந்தது தெருநாய் பைக் விபத்தில் தொழிலாளி பலி!

79பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் கல்குடி ஊராட்சி கீழதாளப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம் வயது (50) கூலித்தொழிலாளி. இவர் கடந்த 1ம் தேதி விராலிமலை வாரச்சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிக்கொண்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இனாம்குளத்துார் சாலையில் வந்தபோது, தெருநாய் ஒன்று குறுக்கே ஓடியது. இதில் நிலைதடுமாறி பைக்குடன் கீழே விழுந்த வெங்கடாச்சலம் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி