ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்!

591பார்த்தது
திருமயம் கோட்டை சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் படித்துறையில் நெடு நாட்களாக எரியாமல் இருந்த தெருவிளக்கை சரி செய்யக் கோரி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில்,

வெகுநாட்களாக மின்விளக்கு எரியாத காரணத்தினால் அப்பகுதி இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. பூச்சிகள், பாம்புகள் அங்க திரிவதால் ஒருவித பயத்துடனே செல்லும் சூழல் உள்ளது. மேலும், இரவு நேரத்தில் சாலை விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே படித்துறை அருகே உள்ள மின்விளக்கை சரி செய்யும் படி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரின் தீவிர முயற்சியால் மின்சார வாரிய ஊழியர்கள் உடனடியாக போர்கால அடிப்படையில் அந்த தெரு விளக்கை சரி செய்தனர். இதனால் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தருக்கு மனமார்ந்த பாராட்டும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

தொடர்புடைய செய்தி