புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூர் கழக முன்னாள் செயலாளர் எம்.எஸ்.அக்பர்அலி நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, அவரது குடும்பத்தினர் அன்னவாசல் மருத்துவமனைக்கு புதிய எக்ஸ்-ரே மெசின் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கருவிகளின் செயல்பாட்டை தொடங்கி வைத்தனர். அப்போது, மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.