கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!

61பார்த்தது
பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் 5வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. ஆலவயலில் நடந்த முகாமை கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் முருகன் தொடங்கி வைத்தார். கால்நடை உதவி டாக்டர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். முகாமில் ஆலவயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கால்நடை களுடன் பங்கேற்றனர். இந்த முகாம் வரும் 30ம் தேதி வரை 21 நாட்கள் தொடர்ந்து நடத்தப்படவுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி