மதியாணி மிதியான்குடி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா!

56பார்த்தது
மதியாணி மிதியான்குடி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா!
பொன்னமராவதி அருகே உள்ள மதியாணி மிதியான்குடி ஐயனார் கோயில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
விழாவையொட்டி செம்பூதியில் அண்மையில் மண்ணினால் புரவிகள் சிலைகள் வடிவமைக்கப்பட்டு அந்த சிலைகள் ஊர்வலமாக மதியாணி எடுத்துவரப்பட்டு அங்கு மந்தையில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து திங்கள்கிழமை புரவிகள், பரிவார தெய்வங்கள் மற்றும் மதலைகள் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, பொதுமக்கள் ஊர்வலமாக சுமக் சென்று மிதியான்குடி ஐயனார் கோயிலில் வைத்து வழிபட்டனர். விழாவில் சுற்றுவட்டார கிராமபொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். விழாவையொட்டி அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல், பி. உசிலம்பட்டி கதிர்வேல் விநாயகர், பழனியாண்டவர் கோயில் ஆடிமாத சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி