அரிமளம் ஒன்றியம் போசம்பட்டியில் கிராம மக்களுக்கு சொந்தமான முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. இந் நிலையில் கும்பாபிஷேக தேதி நிர்ணிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக திருமயம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் புவியரசன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக ஏ பிரிவினர் குறித்த தேதி பி பிரிவினர் குறித்த தேதி இரண்டையும் எழுதி அம்மன் சன்னதியில் வைத்து குலுக்கல் முறையில் ஒரு குழந்தையை வைத்து எடுக்க செய்வது அதில் வரும் தேதியை கும்பாபிஷேகத் தேதியாக முடிவு செய்வது அதுவரை யாரும் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்றார். இதை இரு தரப்பினரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.