மாநில அளவிலான கபடி போட்டி கொன்னையூர் அணி முதலிடம்!

60பார்த்தது
மாநில அளவிலான கபடி போட்டி கொன்னையூர் அணி முதலிடம்!
பொன்னமராவதி அருகே உள்ள மணப்பட்டியில் சங்கிலியான் கபடி குழு சார்பில் ஐந்தாவது ஆண்டாக மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கபடி அணிகள் பங்கேற்றனர். முதல் பரிசை கொன்னையூர் அணியும், இரண்டாம் பரிசை ஆலவயல் கேஎன் பிடி அணியும், மூன்றாம் பரிசை இலுப்பூர் ஏ ம் எஸ் அணியினரும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பொன்னமராவதி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் அடைக்கல மணி, துணைச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட அமைப்பாளர் சாமிநாதன், தூத்தூர் ஊராட்சி தலைவர் பிரவீனா, அதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் ராஜா, தொட்டியம் பட்டி ஊராட்சி துணைத் தலைவர் சாமிநாதன், சுரேஷ், செல்வம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி