முள்ளிப்பட்டி நத்தைகாட்டில் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ் அவரது குழுவினர் கண்மாய்க்கரையில் ஆய்வு செய்தனர். ராஜராஜசோழன் கால சிவன் கோயிலுக்கு அருகில் கல்வெட்டு ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் பழனிமுருகன் கோயில் நந்தவனத்திற்காக ஆசிரியம் விடப்பட்டு நிலங்களை எழுதி வைத்ததாக பொறிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொன்மையான வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என காளிதாஸ் வலியுறுத்தியுள்ளார்.