டாடா மோட்டார்ஸின் உயரிய பதவிக்கு வரும் சாந்தனு நாயுடு

77பார்த்தது
டாடா மோட்டார்ஸின் உயரிய பதவிக்கு வரும் சாந்தனு நாயுடு
மறைந்த டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவின் தனிச் செயலாளராகவும், நண்பராகவும் இருந்த 
சாந்தனு நாயுடு, தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளராகவும், வியூக திட்டங்களில் தலைவராகவும் வரவுள்ளார். சாந்தனு நாயுடுவுக்கு 30 வயதுதான் ஆகிறது. இவ்வளவு இளம் வயதிலேயே டாடா குழுமம் போன்ற ஒரு அமைப்பின் உயர் பதவியை எட்டுவது சிறிய விஷயமல்ல. புனேயில் பிறந்து வளர்ந்த சாந்தனு நாயுடு 2014இல் சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றார். வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி