பஸ்சுக்கு விடுமுறை: பயணிகள் அதிருப்தி!

560பார்த்தது
பஸ்சுக்கு விடுமுறை: பயணிகள் அதிருப்தி!
பொன்னமராவதியில் இருந்து
ஆலவயல், இடையாத்துார், காரையூர், புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு காலை, மாலை என்று 2 வேளை களில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை விடுவதைபோல, அடிக்கடி இந்த பஸ்சும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படுவ தில்லை. மாறாக சென்னை உள்ளிட்ட வேறு வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதனால் இந்த பஸ்சை நம்பியுள்ள கிராமமக்கள், வெளியூர்வாசிகள் சிரமத் துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன் கருதி இந்த பஸ் சேவையை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி