புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், செங்கீரை, கடையக்குடி போன்ற பகுதிகளில் அண்மையில் பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கார்த்திகை பட்டத்திற்காக நெல் பயிரிடப்பட்டு அதற்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை 5 மணிக்கு வயலில் இறங்கி நீர் பாய்ச்சுவது, களை எடுப்பது போன்ற வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாண்டு விவசாயம் நன்றாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.