பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை ஒட்டி சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு இன்று (அக்., 30) தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பரசன், ரகுபதி, எம்.பி., டி.ஆர்.பாலு, மேயர் பிரியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.