மதுரையில் திமுக, சிபிஎம் இடையே மோதல் போக்கு உள்ளதாக பேசப்படும் நிலையில், கடந்த மாதம் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் அமைச்சர் மூர்த்திக்கும், எம்.பி சு. வெங்கடேசனுக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டது. அமைச்சரின் தொகுதியில் எம்.பி.க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டன. மதுரையில் மழை பாதிப்பு விவகாரத்தில், 'எங்கே பாதிப்பு ஏற்பட்டது, எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர் என்பதை எம்.பி.யே சொல்லட்டும் என அமைச்சர் கூறியிருக்கிறார்.