மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் துவக்க நிகழ்வாக, சமீபத்தில் அனைத்து கோபுரங்களுக்கும் பாலஸ்தாபனம் நடைபெற்றுள்ளது. 4 சித்திரை வீதிகளிலும் உள்ள பெரிய கோபுரங்களில் புணரமைப்பு பணிக்காக, சாரங்கள் கட்டப்பெற்று திரைத்துணி சுற்றப்பட்டுள்ளது. எனவே, திருக்கோயிலின் அருகாமையில் வசிக்கும் பொதுமக்கள் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.