பாய்ந்தது உயர் மின்னழுத்தம் மின் சாதனங்கள் சேதம்!

77பார்த்தது
பாய்ந்தது உயர் மின்னழுத்தம் மின் சாதனங்கள் சேதம்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரிமளம் ஒன்றியம் கே. புதுப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட கொசவபட்டி கிராமத்தில் நேற்று இரவு திடீரென அதிக மின்னழுத்தம் ஏற்பட்டதால் பல வீடுகளில் இருந்த மின்விளக்குகள் வெடித்து சிதறின. டிவி, பிரிட்ஜ், மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்றவை எரிந்து சேதமடைந்தன. முருகேசன் என்பவருடைய வீட்டில் குளிர்சாதன பெட்டி எறிந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அறந்தாங்கி தீயணைப்பு நிலைய மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்விநியோகத்தை நிறுத்தி மின்மாற்றியின் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி