கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்!

72பார்த்தது
கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்!
திருமயம் அரிமளம் அருகே உள்ள மேல்நிலைப் பட்டியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு தஞ்சை சரக டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டின் முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த காரை சோதனையிட்டபோது, 28 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் சுமார் ஆயிரத்து 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. வாகனத்தின் உரிமை யாளர் செந்தில்குமார்(45)என்பவரிடம் விசாரித்தபோது, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்துக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாரை கைது செய்த போலீசார், காருடன், அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி