புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

68பார்த்தது
புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருமயம்: புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில் உலக புற்று நோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட் டது. கல்லுாரி இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், முதல்வர் பாலமு ருகன் ஆகியோர் வழி காட்டுதல்படி, செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் லட்சுமண் குமார் முன்னிலையில் மாணவர்கள் 32 பேர் ஏனப்பட்டி கிராமத்தில் முகாமிட்டு புற்று நோய் அறிகுறிகள், நோய்க்கான காரணங்கள், பாதிப்புகள், சிகிச்சை முறைகள் குறித்த கிராமமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி