கீழாத்தூர்-கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்சாதனங்களை பாதுகாப்புடன் கையாளுவது பற்றிய குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளியிலும், வீட்டிலும் மின்சாதனங்களை எப்படி கவனமாகக் கையாள வேண்டும், மின்சாரம் தாக்காத வண்ணம் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.