ஒரு நாய் கடித்ததில் 4- மாணவர்கள் காயம்!

59பார்த்தது
ஒரு நாய் கடித்ததில் 4- மாணவர்கள் காயம்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராயவரத்தில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி உள்ளது இங்குள்ள பள்ளிக்கு வகுப்பு முடிந்து மாணவ மாணவியர் நேற்று மாலை வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்பொழுது புதூர் வீதியில் சுற்றித்திரிந்த வெறுநாய் ஒன்று மாணவர்களை துரத்தி கடித்ததில் ராகேஷ், ஹரிணி, அம்ருத், லாவண்யா, ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது உடனடியாக அவர்கள் ராயவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு நான்கு பேருக்கும் வெறி நாய் கடி தடுப்பூசி செலுத்தப்பட்டது. ராயவரம், ஆயங்குடி ஊராட்சியில் அதிக அளவில் வெறிநாய் உள்ளதாகவும் அவற்றைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வெறிநாய்கள் தற்பொழுது அதிகரித்து உள்ளது என்றும் சராசரியாக தினமும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து முதல் 10 பேர் வெறி நாய் கடிக்கு ஆளாகின்றனர் என தெரிய வருகிறது.
ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி வெறிநாய்களை பிடிக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி